குறிச்சொல் தொகுப்புகள்: PC

உங்கள் கணினியை மொபைல் ப்ளூடூத் உடன் இணைக்க எளிய வழிமுறைகள் spvvivek1998


மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு முறையும் டேட்டா கேபிள்களை வைத்திருக்க முடியாது. இருந்தும் தகவல்களை மாற்ற ப்ளூடூத் வசதியை பயன்படுத்தலாம். ப்ளூடூத் மூலம் இரு கருவிகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்வது எளிமையாக முடிகிறது. ஆனால் ப்ளூடூத் கருவியை கணினியுடன் இணைப்பது கடினமாக உள்ளதா, அப்ப இதை படிங்க…
ஆன்முதலில் உங்க மொபைல் ப்ளூடூத்தை ஆன் செய்யுங்கள், பின் அந்த டிவைஸ் கண்டுபிடிக்கும்படி (டிஸ்கவரபிள் ஆப்ஷனில்) உள்ளதா என்று பாருங்கள்.
கணினிஇப்ப உங்க கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனு சென்று கன்ட்ரோல் பேனலை க்ளிக் பன்னுங்க, அங்கு டிவைசஸ் மற்றும் ப்ரின்டர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
ஆட் டிவைஸ்இப்போ ஆட் டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இது ஹார்டுவேர் மற்றும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும்.
தேடல்ஆட் டிவைஸ் பட்டனை க்ளிக் செய்தவுடன் தானாக ப்ளூடூத் டிவைஸை தேட ஆரம்பிக்கும்.
கணினிஇப்போ உங்க கணினியை மொபைல் கருவியுடன் இணைக்கலாம். உங்க ப்ளூடூத் பெயர் மெனுவில் தெரிந்ததும் Next என்ற பட்டனை அழுத்தவும். இது கணினியுடன் ப்ளூசூத் இணைவதை உறுதி படுத்தும்.

Thanks to : : http://www.anbuthil.com/2014/11/pc-to-mobile-bluetooth.html

Advertisements

உங்கள் Pendrive ஐ RAM ஆக மாற்ற வேண்டுமா? spvvivek1998


கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.பயன்படுத்தும் வழிமுறைகள்:1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ளஅனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB)2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.4. Setiing என்பதை Click செய்க5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.8. set என்பதை click செய்யவும்.9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்..9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும”

thanks to https://m.facebook.com/karthikeyanbpt0

உங்கள் Mobile Phoneல் இருந்து Computerயை இயங்க வைப்பது எப்படி? spvvivek1998


அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாகஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.
இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.
Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.
Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.
left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.
Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.
இதை தரவிறக்கம் செய்ய.

http://adf.ly/tvAyV

var adfly_id=8231152;

கணினி Mouse இல் மறைந்திருக்கும் சில வசதிகள் spvvivek1998


கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் Mouse ஆனது கணினியை பயன்படுத்துவதற்கு இன்றி அமையாத ஒரு சாதனமாகும். மடிக்கணினி பயன்படுத்துபவர்கள் கூட Touch Pad இற்கு பதிலாக பிரத்தியோக Mouse ஒன்றினை இணைத்து பயன்படுத்துவதும் உண்டு. (என்னை போன்று)
நாம் இதனை கணினிபயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தினாலும் இதில் இருக்கும் சில வசதிகளை நாம் சரியாக அறிந்ததில்லை. அவ்வாறான சில வசதிகளை கீழே பார்க்கலாம்.
*.உங்கள் கணனியில் உள்ள அல்லது இணையத்தில் இருக்கக்கூடிய எழுத்து வடிவில் அமைந்த ஆவணங்களில்/பதிவுகளில் உள்ள ஒரு சொல்லினை தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நாம் அவற்றினை Mouse மூலம் Click செய்து தெரிவு செய்வோம் அல்லவா?ஆனாலும் குறிப்பிட்ட சொல்லினை Double Click செய்வதன் மூலம் மிக இலகுவாக தெரிவு செய்து கொள்ள முடியும்.
*.அதே போல் எழுத்து வடிவில் அமைந்த ஒரு ஆவணத்தில்/பதிவில் உள்ள ஒரு வசனத்தினை அல்லது பந்தியினை தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் குறிப்பிட்ட வசனத்தின் அல்லது பந்தியின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை Mouse மூலம் Click செய்தவாறு தெரிவு செய்வோம் அல்லவா? ஆனாலும் இதனை பின்வரும் வழிமுறையிலும் மேற்கொள்ளலாம்.
அதாவது குறிப்பிட்ட வசனத்தின் அல்லது பந்தியின் ஆரம்ப இடத்தினை Mouse ஆள் Click செய்து விட்டு அதன் இறுதிப்பகுதியை Shift Key ஐ அழுத்தியவாறு Click செய்ய வேண்டும். இனி குறிப்பிட்ட வசனம் அல்லது குறிப்பிட்ட பந்தி தெரிவு செய்யப்படும்.
*.இணையத்தில் இருக்கும் ஒரு இணைப்பை புதியதொரு தாவலில் (Tab) திறக்க வேண்டும் எனின் நாம் பொதுவாக அந்த இணைப்பினை Right Click செய்து Open Link in New Tab என்பதனை சுட்டுவோம் அல்லவா?இருப்பினும் குறிப்பிட்ட இணைப்பினை Mouse இன் Scroll Wheel மூலம் சுட்டுவதன் மூலமாக அதனை புதியதொரு தாவலில் திறந்து கொள்ள முடியும்.

Tnq to : http://www.tamilinfotech.com

பங்ஷன் கீ uses


F1
இதனை அழுத்தினால் அப்போது இயங்கும் புரோகிராமின் ஹெல்ப் பைல் நமக்குக் கிடைக்கும்.இதைச் சோதனை செய்திட உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் இடது கிளிக் செய்திடவும். பின் எப்1 அழுத்தவும். ஹெல்ப் பைல் உங்களுக்குக் கிடைக்கும். அதில் பல்வேறு வகையான ஹெல்ப் சங்கதிகள் கிடைப்பதனைப் பார்க்கலாம்.
F2
இது பெரும்பாலும் பைல் பெயரினை மாற்றி அமைத்திட உதவுகிறது.
பைல் அல்லது போல்டர் ஒன்றில் ஒரு கிளிக் செய்திடவும். பின்னர் F 2 கீயை அழுத்தினால் அந்த பைல் அல்லது போல்டரின் பெயரை மாற்றும் வசதி தரப்படும். நாம் சில வேளைகளில் பைல்களை ஸிப் செய்வோம். அப்போது குறிப்பிட்ட வழிகளில் பைல்களுக்குப் பெயரிட எண்ணுவோம். அப்போது இது மிகவும் உதவும். பைல் மெனு பெற்று பின் ரீநேம் அழுத்திச் செய்வதனைக் காட்டிலும் குறைவான நேரத்தில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு இந்த கீ உதவுகிறது.
F3
இந்த கீ விண்டோஸ் இயக்கத்தில் தேடுதல் செயல்பாட்டினை மேற்கொள்ள உதவுகிறது. ஆனால் மற்ற புரோகிராம்களில்இது வெவ்வேறு செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சொல் தேடுதலில் இந்த கீ சிறப்பாக உதவும்.
F4
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த கீ அட்ரஸ் பாரினைத் திறப்பதில் உதவுகிறது. விண்டோஸ் தொகுப்பில் இதனுடன் ஆல்ட் கீயைச் சேர்த்து அழுத்த அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமினை முடிவிற்குக் கொண்டு வர உதவுகிறது. விண்டோஸ் இயக்கத்தை மூடவும் இது இதே வகையில் உதவிடும்.
F5
பொதுவாக இது ரெப்ரெஷ் கீ என்றே அழைக்கப்படுகிறது. உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட இந்த கீயைப் பயன்படுத்தலாம்.
F6
அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில் ஒவ்வொரு பீல்டுக்கும் இடையே கர்சரைக் கொண்டு செல்ல இந்த கீ உதவுகிறது. விண்டோஸில் கச்ணஞு களுக்கு இடையே செல்ல இதனைப் பயன்படுத்தலாம்.
F7
இது புரோகிராம் சம்பந்தப்பட்டது. அந்த அந்த புரொகிராம்களுக்கு ஏற்றவகையில் இது செயல்படும். எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பைலைத் திறந்து இந்த கீயைப் பயன்படுத்திப் பார்த்து இதன் செயல்பாட்டினைத்தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
F8
இந்த கீயின் முதன்மைச் செயல்பாடு விண்டோஸ் இயக்கத்தை சேப் மோடில் கொண்டு வர உதவுவதாகும்.
F9
இதுவும் புரோகிராமுடன் இணைந்து மட்டுமே செயல்படும் கீயாகும். நான் இதனை சோம்பேறி கீ என்று அழைப்பேன். ஏனென்றால் அவ்வளவாக இதன் செயல் பாடு இருப்பதில்லை. நீங்கள் வேர்ட் பயன்படுத்துகையில் இந்த கீயினைப் பயன்படுத்தினால்செலக்ட் செய்யப்பட்ட பீல்ட் அப் டேட் செய்யப்படும்.
F10
இந்த கீ புரோகிராம்களில்மெனு (File, Edit, View, Etc.). பாரினை அணுகப் பயன்படுகிறது.
F11
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் முழுத் திரையில் இணையப் பக்கங்களைக் காண இது பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (“KIOSK” mode) என அழைக்கின்றனர்.
F12
இன்னொரு சோம்பேறி. ஒரு சில புரோகிராம்கள் மட்டும் இந்த கீக்கு சில செயல்பாடுகளை அளித்துள்ளன. எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் இது Save As கட்டளைக்குப் பயன்படுகிறது.
_________________________________________
Visite :
https://spvvivek1998.wordpress.com/
_________________________________________
Like Us On Facebook :
http://facebook.com/spvvivek1998
_________________________________________
Follow us on twitter :
http://twitter.com/spvvivek1998
_________________________________________