குறிச்சொல் தொகுப்புகள்: Mobile

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி


மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில்அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.

இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.
உங்கள் போனில் இருந்து பாட்டரி,சிம்கார்ட்,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளிபாகங்களை துடைக்கவும்.
உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleanerஇல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும்.

இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).
அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம்.

Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும்.

இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால்போன் ஓகே,பேட்டரி பிரச்சினை.

அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம்கொண்டு போய் கொடுக்கவும்.

Thanks to : http://computertricks4pc.blogspot.com

Advertisements

உங்கள் கணினியை மொபைல் ப்ளூடூத் உடன் இணைக்க எளிய வழிமுறைகள் spvvivek1998


மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு முறையும் டேட்டா கேபிள்களை வைத்திருக்க முடியாது. இருந்தும் தகவல்களை மாற்ற ப்ளூடூத் வசதியை பயன்படுத்தலாம். ப்ளூடூத் மூலம் இரு கருவிகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்வது எளிமையாக முடிகிறது. ஆனால் ப்ளூடூத் கருவியை கணினியுடன் இணைப்பது கடினமாக உள்ளதா, அப்ப இதை படிங்க…
ஆன்முதலில் உங்க மொபைல் ப்ளூடூத்தை ஆன் செய்யுங்கள், பின் அந்த டிவைஸ் கண்டுபிடிக்கும்படி (டிஸ்கவரபிள் ஆப்ஷனில்) உள்ளதா என்று பாருங்கள்.
கணினிஇப்ப உங்க கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனு சென்று கன்ட்ரோல் பேனலை க்ளிக் பன்னுங்க, அங்கு டிவைசஸ் மற்றும் ப்ரின்டர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
ஆட் டிவைஸ்இப்போ ஆட் டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இது ஹார்டுவேர் மற்றும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும்.
தேடல்ஆட் டிவைஸ் பட்டனை க்ளிக் செய்தவுடன் தானாக ப்ளூடூத் டிவைஸை தேட ஆரம்பிக்கும்.
கணினிஇப்போ உங்க கணினியை மொபைல் கருவியுடன் இணைக்கலாம். உங்க ப்ளூடூத் பெயர் மெனுவில் தெரிந்ததும் Next என்ற பட்டனை அழுத்தவும். இது கணினியுடன் ப்ளூசூத் இணைவதை உறுதி படுத்தும்.

Thanks to : : http://www.anbuthil.com/2014/11/pc-to-mobile-bluetooth.html

SAMSUNGமொபைல் போன்களுக்கான குறியீடு spvvivek1998


1)*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# – ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

வாட்ஸ்அப் இலவச வாய்ஸ் கால் சேவை


இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் நிறுவனம் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

Whatsapp Logo

அதன்படி வாட்ஸ்அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை 2015ல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளதால் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது. இத்தகைய பிரபலமான வாட்ஸ்அப் 600 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட செல்போன்களில் சில குறைபாடு இருப்பதால் அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய அம்சங்களை கொண்ட வாட்ஸ் அப் வெர்சன் 4.5.5 என்ற பதிப்பில் வெளியாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
Source : Internet