குறிச்சொல் தொகுப்புகள்: Microsoft

19 வருடமாக மைக்ரோசாப்ட்க்கு டிமிக்கி கொடுத்த வைரஸ். ஐ.பி.ம் கண்டுபிடிப்பு


இன்றைய நிலையில் 100 கோடிக்கும் அதிகமானோர் மைக்ரோசாப்ட்(Microsoft) இயங்குநிலையை ( Operating System)மிகவும் நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றனர். இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் 19 வருடமாக மைக்ரோசாப்ட்க்கு டிமிக்கி கொடுத்த வந்த வைரஸ் ஒன்றை ஐ.பி.ம்கணினி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐ.பி.ம் கணினி வல்லுனர் ராபர்ட் ப்ரீமன் இந்த வைரஸை “rare, ‘unicorn-like’பிழை என குறிப்பிடுகிறார். மேலும் இந்த வைரஸ் மைக்ரோசப்ட் விண்டோஸ் 95 இல் இருந்தே தொடர்ந்து வந்துள்ளது எனவும் இதன் மூலம் வெளியில் ரிமோட் கணினியில் இருந்து தகவல்களை செயல்ப்படுதலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
தற்போது இதனை கண்டறிந்த ஐ.பி.ம் கணினி வல்லுனர்கள் மேலும் கண்டுபிடிக்கப்படாத நிறைய வைரஸ்கள் உள்ளன எனவே நமது திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு. தற்போது இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்படுள்ளது ஒரு நல்ல செய்தி தான் என தெரிவித்துள்ளனர் .
அனைவரும் லினக்ஸ் போன்ற இலவச மற்றும் பாதுகாப்பான இயங்குதளத்திற்கு மாறிவரும் வேளையில் இந்த வைரஸ் மைக்ரோசாப்ட்டின் தொழில்நுட்பம் மேலே மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது எனலாம்
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

tnq to : http://kaninitamilan.in/

Advertisements