குறிச்சொல் தொகுப்புகள்: Google

Google இன் துல்லியமான தேடல் முடிவுகளை பெறுவதற்கான தேடல் முறைகள்.


Google பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் Google பற்றி தேடாவிட்டாலும் Google உங்களை தேடி வரும் என்றே சொல்ல வேண்டும். Google பவேறு வடிவங்களில் அதன் சேவையினை பயனர்களுக்கு வழங்கி வந்தாலும் அன்று தொடக்கம் இன்று வரை தேடல் இயந்திரத்தின் முதல்வனாகவே இருந்து வருகிறது இந்த Google.
தேடல்களுக்கான சிறந்த முடிவுகளை Google தருவதோடு இன்னும் இலகுவாக தேடல் முடிவுகளை அடைந்திட Google பல்வேறு சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
மிகவும் துல்லியமானதேடல் முடிவுகளை அடைந்திட பின்வரும் உபாயங்களை பின்பற்றுங்கள்.
குறிப்பிட்ட ஓரிடத்தின் காலநிலையை பற்றி அறிய வேண்டுமாயின்
Google.com தேடல் பக்கத்துக்கு சென்று Weather என தட்டச்சு செய்து காலநிலை அறிய வேண்டிய இடத்தினை தட்டச்சு செய்க உதாரணமாக இலங்கையின் தலைநகரம் Colombo இன் காலநிலையை அறிய வேண்டுமெனின்
Weather colomboஎன தட்டச்சு செய்க.
Google இணை ஒரு கணிப்பான பயன்படுத்த
கணிக்க வேண்டிய சமன்பாடை Google இல் தட்டச்சு செய்க
உதாரணமாக :5*5(9+1)இதனை Google இடம் கொடுத்துப்பாருங்கள் துல்லியமாக 250 என சொல்லும்.
ஓர் அலகிலிருந்து இன்னுமோர் அலகுக்கு மாற்ற
உதாரணமாக : கிராம் இனை கிலோ கிராம் இற்கு மாற்ற3500g to kg
வெப்பநிலை,நீளம், வேகம், ஒலி, இடம், நேரம், சேமிப்பகம்,என ஏராளமான அலகுகளை மாற்றிக்கொள்ள முடியும்.
தற்போதைய உங்கள் வலையமைப்பின் முகவரியை கண்டறிய.
Google தேடல் பக்கத்தில் My Ip என தட்டச்சு செய்க.
நேரத்தை அறிய
குறிப்பிட்ட ஓர் இடத்தின் நேரத்தை அறிய Time என தட்டச்சுசெய்து குறிப்பிட்ட இடத்தினை தட்டச்சு செய்க
உதாரணமாக : Time Tamil Nadu
நாணய மாற்று விகிதத்தை அறிய
குறிப்பட்ட அந்த நாட்டு நாணயத்தை அடையாளப் படுத்தப்படும் குறியீட்டுடன் பின்வரும் அமைப்பில் தட்டச்சு செய்க
உதாரணமாக : 10 US $ இணை இலங்கை ரூபாவுக்கு மாற்ற 10$=?lkr என தட்டச்சு செய்க
குறிப்பிட்ட ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டுமெனின்
Define என தட்டச்சு செய்து பொருளறிய வேண்டய சொல்லை தட்டச்சு செய்க
உதாரணமாக : define leadership என தட்டச்சு செய்க.
ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் சனத்தொகைய அறிய
Population என தட்டச்சு செய்து சனத்தொகையை அறிய வேண்டிய நாட்டை அல்லது பிரதேசத்தை தட்டச்சு செய்க.
உதாரணமாக : Population india
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்.
குறிப்பிட்ட ஓரிடத்தின் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அறிய வேண்டுமெனின் பின்வருமாறு தட்டச்சு செய்க
சூரிய உதயத்தை அறிய : Sunrise குறிப்பிட்ட இடம்
சூரிய அஸ்தமனத்தை அறிய : Sunset குறிப்பிட்ட இடம்
உதாரணமாக : Sunrise colombo, Sunset kandy

thanks to http://www.tamilinfotech.com/2013/05/Google-Searching-Tips.html

Advertisements