Category Archives: smartphone

Facebook Groups App எனும் புதியதொரு மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது Facebook நிறுவனம்.


இந்த மென்பொருளானது உங்கள் உறவினர் நண்பர்களுடன் குழு அரட்டையில் ஈடுபடுவதனை மிகவும் இலகுபடுத்துகின்றது.

உங்கள் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், வகுப்பு மாணவர்கள், விடுதி நண்பர்கள் என உங்கள் நண்பர்களை தனித்தனி குழுக்களாக அமைத்துக் கொள்ளவும் அவர்கள் ஒவ்வொருவருடனும்ஒரே நேரத்தில் கருத்துக்களை பரிமாரிக் கொள்வதனையும் மிக இலகுபடுத்தித் தருகின்றது.

Android, iOS போன்ற Smart சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும’

Thanks To Tamilinfotech

கண் சிமிட்டினாலே செல்ஃபி எடுக்கும் புதியஸ்மார்ட்போன்


பானா சோனிக் கைப்பேசி நிறுவனம், கண் சிமிட்டினாலே செல்ஃபி எடுக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பானாசோனிக் இந்தியா தற்போது புதிதாக வெளியிட்டுள்ள எலுகா எஸ் என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.11,190க்கு வெளியிடப்பட்டுள்ளது.

செல்ஃபிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில்,செல்ஃபி அல்லது குழுவாக சேர்ந்து புகைப்படம் எடுக்கும்போது, உங்கள் கண்களை சிமிட்டினாலே புகைப்படம் தானாக எடுக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விவரங்கள்: எலுகா எஸ் 5 இன்ச்,
1280*720 பிக்சல்,
எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டு 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் இதில் உள்ளது.

ஆன்டிராய்டு வி4.4 கிட்காட் இயங்குதளம் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

Camera வை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கமெராவும் உள்ளது.

மேலும் இதில் 3ஜி எஹ்எஸ்பிஏ, வைபை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் இருப்பதோடு 2100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Thanks to :

https://m.facebook.com/groups/1466282100311196?view=permalink&id=1519779378294801&_rdr#1520905418182197

ஸ்மார்ட் போன் கீ வந்தாச்சு


ஸ்மார்ட் போனிலேயே பணம் செலுத்தும் வசதி வந்தாச்சு.

var adfly_id=8231152;

Spvvivek1998

இனி ஹோட்டல் அறைகளுக்கான சாவியாகவும் ஸ்மார்ட் போனே பயன்படலாம்.

அமெரிக்காவின் ஸ்டார் வுட்ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டல்களில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஹோட்டல் அறையில் உள்ள பூட்டுகள் புளுடூத் வசதி கொண்டதாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்அல்லது ஆன்லைனில் ரூம் புக் செய்யும்போதுஅறை எண் போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆக,ஹோட்டலுக்கு வந்தால் வரவேற்பறையில் காத்திருக்காமல் நேராக ரூமுக்குசென்று ஸ்மார்ட்போனைக்காட்டிக் கதவைத் திறக்கலாம்.

மற்ற ஹோட்டல்களும் இதே போன்ற திட்டத்தை வைத்துள்ளன.
இந்வசதி எளிதானது என்றாலும் பாதுகாப்பு பற்றிய அச்சங்களும் இருக்கவே செய்கின்றன.
ஆனால் ஹோட்டல் சாவியை மறந்து வைத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது.
ஸ்மார்ட்போன் போல ஸ்மார்ட்வாட்சிலும் இந்த வசதி வரலாம் என்கின்றனர்.
ஹோட்டல் மட்டுமா, வீடுகளுக்கும் ஸ்மார்ட்கீ வரப்போகிறது. எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்.

Thanks to
http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_17.html