Category Archives: PC

பங்ஷன் கீ uses


F1
இதனை அழுத்தினால் அப்போது இயங்கும் புரோகிராமின் ஹெல்ப் பைல் நமக்குக் கிடைக்கும்.இதைச் சோதனை செய்திட உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் இடது கிளிக் செய்திடவும். பின் எப்1 அழுத்தவும். ஹெல்ப் பைல் உங்களுக்குக் கிடைக்கும். அதில் பல்வேறு வகையான ஹெல்ப் சங்கதிகள் கிடைப்பதனைப் பார்க்கலாம்.
F2
இது பெரும்பாலும் பைல் பெயரினை மாற்றி அமைத்திட உதவுகிறது.
பைல் அல்லது போல்டர் ஒன்றில் ஒரு கிளிக் செய்திடவும். பின்னர் F 2 கீயை அழுத்தினால் அந்த பைல் அல்லது போல்டரின் பெயரை மாற்றும் வசதி தரப்படும். நாம் சில வேளைகளில் பைல்களை ஸிப் செய்வோம். அப்போது குறிப்பிட்ட வழிகளில் பைல்களுக்குப் பெயரிட எண்ணுவோம். அப்போது இது மிகவும் உதவும். பைல் மெனு பெற்று பின் ரீநேம் அழுத்திச் செய்வதனைக் காட்டிலும் குறைவான நேரத்தில் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கு இந்த கீ உதவுகிறது.
F3
இந்த கீ விண்டோஸ் இயக்கத்தில் தேடுதல் செயல்பாட்டினை மேற்கொள்ள உதவுகிறது. ஆனால் மற்ற புரோகிராம்களில்இது வெவ்வேறு செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு சொல் தேடுதலில் இந்த கீ சிறப்பாக உதவும்.
F4
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இந்த கீ அட்ரஸ் பாரினைத் திறப்பதில் உதவுகிறது. விண்டோஸ் தொகுப்பில் இதனுடன் ஆல்ட் கீயைச் சேர்த்து அழுத்த அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமினை முடிவிற்குக் கொண்டு வர உதவுகிறது. விண்டோஸ் இயக்கத்தை மூடவும் இது இதே வகையில் உதவிடும்.
F5
பொதுவாக இது ரெப்ரெஷ் கீ என்றே அழைக்கப்படுகிறது. உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது இணையப் பக்கத்தினை ரெப்ரெஷ் செய்திட இந்த கீயைப் பயன்படுத்தலாம்.
F6
அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில் ஒவ்வொரு பீல்டுக்கும் இடையே கர்சரைக் கொண்டு செல்ல இந்த கீ உதவுகிறது. விண்டோஸில் கச்ணஞு களுக்கு இடையே செல்ல இதனைப் பயன்படுத்தலாம்.
F7
இது புரோகிராம் சம்பந்தப்பட்டது. அந்த அந்த புரொகிராம்களுக்கு ஏற்றவகையில் இது செயல்படும். எனவே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பைலைத் திறந்து இந்த கீயைப் பயன்படுத்திப் பார்த்து இதன் செயல்பாட்டினைத்தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் பைலை சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
F8
இந்த கீயின் முதன்மைச் செயல்பாடு விண்டோஸ் இயக்கத்தை சேப் மோடில் கொண்டு வர உதவுவதாகும்.
F9
இதுவும் புரோகிராமுடன் இணைந்து மட்டுமே செயல்படும் கீயாகும். நான் இதனை சோம்பேறி கீ என்று அழைப்பேன். ஏனென்றால் அவ்வளவாக இதன் செயல் பாடு இருப்பதில்லை. நீங்கள் வேர்ட் பயன்படுத்துகையில் இந்த கீயினைப் பயன்படுத்தினால்செலக்ட் செய்யப்பட்ட பீல்ட் அப் டேட் செய்யப்படும்.
F10
இந்த கீ புரோகிராம்களில்மெனு (File, Edit, View, Etc.). பாரினை அணுகப் பயன்படுகிறது.
F11
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் முழுத் திரையில் இணையப் பக்கங்களைக் காண இது பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் (“KIOSK” mode) என அழைக்கின்றனர்.
F12
இன்னொரு சோம்பேறி. ஒரு சில புரோகிராம்கள் மட்டும் இந்த கீக்கு சில செயல்பாடுகளை அளித்துள்ளன. எம்.எஸ். வேர்ட் தொகுப்பில் இது Save As கட்டளைக்குப் பயன்படுகிறது.
_________________________________________
Visite :
https://spvvivek1998.wordpress.com/
_________________________________________
Like Us On Facebook :
http://facebook.com/spvvivek1998
_________________________________________
Follow us on twitter :
http://twitter.com/spvvivek1998
_________________________________________

Advertisements

BOOT ஆகாத கணினியை USB வழியாக BOOT செய்ய spvvivek1998


எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk-ன் உதவியில் Boot
ஆகி இயங்க ஆரம்பிக்கும். Boot என்பது கணினியை
ஆரம்பிக்கும் செயல். ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy, CD, DVD வாயிலாக Boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.
ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting CD /DVD யோ இல்லாமல் இருக்கும். இன்றைக்கு எல்லாரிடத்திலும் USB Drive கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப்படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம் (Operating System).
இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம். செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி Boot செய்து இயக்கி உங்களது பழைய Data-களை மீட்டெடுக்கலாம்.
கீழே உள்ள லிங்கை டவுன்லோட் செய்து வரும் பைலை Winrar உதவியுடன் திறந்து அதிலுள்ள Readme.TXT பைலை படித்து அதன்படி செயல்படுத்தவும்.
By:-
Jahan Moulana
http://fb.com/groups/JahanSoft94/

போட்டோஷாப் மென்பொருள் நிறுவுவது எப்படி?-spvvivek1998


முதலில் உங்கள் கணினியில் போட்டோஷாப் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் போட்டோஷாப் மென்பொருள் கொண்டுCD –ஐ CD Drive-ல் உட்செலுத்தியவுடன் தானாக மென்பொருள் திறந்துகொள்ளும்.
இல்லையெனில் My computer click செய்துCD driveஐக்கானை(icon) double கிளிக் செய்து setup.exe என்பதை டபுள் கிளிக் செய்து ஓ.கே செய்யவும்.. இப்போதுInstalation programme இயங்க ஆரம்பிக்கும்.
அது கேட்கும் கேள்விகளுக்கு தேவையான தகவல்களை கொடுத்து நீங்கள் வெற்றிகரமாக உங்கள் கணினியில் போட்டோஷாப் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம். இது மிகவும் எளிதான ஒன்றுதான்.
போட்டோஷாப் மென்பொருள் நிறுவ உங்கள் கணினி குறைந்த பட்ச இத்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
16 bit க்கு மேல் உள்ள எந்த வீடியோ கார்டு (Video Card)உடன் கூடிய கலர் மானிட்டர் (color monitor)இருக்க வேண்டும்.

*.பென்டியம் (Pentium®) IIIஅல்லதுIV ,இன்டெல்(intel®),அல்லது இன்னும் மேம்படுத்தப்பட்டprosserஇருந்தால் சிறப்பாக இருக்கும்.

*.Monitor –ன்Resolution1024X768என வைத்துக்கொள்ளவும். மற்றும் முக்கியமானதுCD-ROM Drive.

*.RAM 256 MBதிறன் கொண்ட ராம் மெமரி கார்டு (Memory Card)இருந்தால் சிறப்பாக இருக்கும். இதற்கும் குறைவான திறன் கொண்டRamஇருந்தால் போட்டோக்களை திறக்க நேரம் பிடிக்கும்.

*.இம்மென்பொருளானது இயங்க குறைந்தபட்சm Windows 2000, Windows XP, Windows Vista,Windows 7, 8போன்ற புதிய மேம்படுத்தப்பட்ட operating systemகளில் பக்காவாக இயங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முந்தைய version களில் போட்டோஷாப் மென்பொருள் இயங்காது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
Thanks To
http://computertricks4pc.blogspot.in/

உங்கள் கணினியின் இயங்குதளம் நிறுவப்பட்ட திகதி மற்றும் நேரத்தினை அறிய


நீங்கள் பயன்படுத்துவது Windows 7 இயங்குதளம் நிறுவப்பட்ட கணினி எனின் Command Prompt இல் systeminfo | find /i “install date” என தட்டச்சு செய்து Enter அழுத்துக.

நீங்கள் பயன்படுத்துவது Windows 8/8.1 இயங்குதளம் நிறுவப்பட்ட கணினி எனின் Command Prompt இல் systeminfo | find /i “Original” என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி உங்கள் கணினியின் இயங்குதளம் நிறுவப்பட்ட நேரம் மற்றும் திகதியினை அறிந்து கொள்ளலாம்.

Thanks to
http://www.facebook.com/Tamilinfotech