Category Archives: internet

Facebook Groups App எனும் புதியதொரு மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது Facebook நிறுவனம்.


இந்த மென்பொருளானது உங்கள் உறவினர் நண்பர்களுடன் குழு அரட்டையில் ஈடுபடுவதனை மிகவும் இலகுபடுத்துகின்றது.

உங்கள் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், வகுப்பு மாணவர்கள், விடுதி நண்பர்கள் என உங்கள் நண்பர்களை தனித்தனி குழுக்களாக அமைத்துக் கொள்ளவும் அவர்கள் ஒவ்வொருவருடனும்ஒரே நேரத்தில் கருத்துக்களை பரிமாரிக் கொள்வதனையும் மிக இலகுபடுத்தித் தருகின்றது.

Android, iOS போன்ற Smart சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும’

Thanks To Tamilinfotech

Advertisements

மெமரி ஸ்கேல்


பிட், பைட் என்ற அளவு குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பெரிய அளவுகளில் டேட்டாக்கள் அடையும் போது, அவற்றின் அலகுச் சொற்கள் என்ன வென்று, சட் என நமக்கு நினைவிற்கு வராது. சிடி ராம், ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ், டிவிடி ராம், புளு ரே டிஸ்க் ஆகியவற்றின் அளவுகளைக் குறிக்கையில் இந்த அலகு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிலோ பைட், கிகா பைட், டெரா பைட் அளவில் நாம் ஓரளவு இவற்றை உணர்கிறோம். அதற்கும் மேலாகவும் அலகுச் சொற்கள் வந்துள்ளன. எனவே அவற்றை இங்கு காணலாம்.
ஒரு கிலோ பைட் (kilobyte)= 1,024 பைட்ஸ்
ஒரு மெகா பைட் (megabyte)=1,024 கிலோ பைட்ஸ்
ஒரு கிகா பைட் (gigabyte)=1,024 மெகா பைட்ஸ்
ஒரு டெரா பைட் (terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்
ஒரு பெட்டா பைட் (petta byte) = 1,024 டெரா பைட்ஸ்
ஒரு எக்ஸா பைட் (exa byte)=1,024 பெட்டா பைட்ஸ்
ஒரு ஸெட்டா பைட் (zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்
ஒரு யோட்டா பைட் (yotta byte) = 1,024 ஸெட்டா பைட்ஸ்
கம்ப்யூட்டர் கணக்கில் ஒரு கிலோ என்பது 2 டு த பவர் ஆப் 10 (2^10) அதனால் தான் 1,024 எனக் கிடைக்கிறது. ஒரு சிலர் இதனை 10 டு த பவர் ஆப் 3 (10^3) என எடுத்துக் கொள்கிறார்கள். ட்ரைவ்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட இது போல சமயங்களில் எடுத்துக் கொள்வதால் தான், நமக்கு 1,024 க்குப் பதிலாக 1,000 கிடைக்கிறது.
Thanks to Dinamalar

Google இன் துல்லியமான தேடல் முடிவுகளை பெறுவதற்கான தேடல் முறைகள்.


Google பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் Google பற்றி தேடாவிட்டாலும் Google உங்களை தேடி வரும் என்றே சொல்ல வேண்டும். Google பவேறு வடிவங்களில் அதன் சேவையினை பயனர்களுக்கு வழங்கி வந்தாலும் அன்று தொடக்கம் இன்று வரை தேடல் இயந்திரத்தின் முதல்வனாகவே இருந்து வருகிறது இந்த Google.
தேடல்களுக்கான சிறந்த முடிவுகளை Google தருவதோடு இன்னும் இலகுவாக தேடல் முடிவுகளை அடைந்திட Google பல்வேறு சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
மிகவும் துல்லியமானதேடல் முடிவுகளை அடைந்திட பின்வரும் உபாயங்களை பின்பற்றுங்கள்.
குறிப்பிட்ட ஓரிடத்தின் காலநிலையை பற்றி அறிய வேண்டுமாயின்
Google.com தேடல் பக்கத்துக்கு சென்று Weather என தட்டச்சு செய்து காலநிலை அறிய வேண்டிய இடத்தினை தட்டச்சு செய்க உதாரணமாக இலங்கையின் தலைநகரம் Colombo இன் காலநிலையை அறிய வேண்டுமெனின்
Weather colomboஎன தட்டச்சு செய்க.
Google இணை ஒரு கணிப்பான பயன்படுத்த
கணிக்க வேண்டிய சமன்பாடை Google இல் தட்டச்சு செய்க
உதாரணமாக :5*5(9+1)இதனை Google இடம் கொடுத்துப்பாருங்கள் துல்லியமாக 250 என சொல்லும்.
ஓர் அலகிலிருந்து இன்னுமோர் அலகுக்கு மாற்ற
உதாரணமாக : கிராம் இனை கிலோ கிராம் இற்கு மாற்ற3500g to kg
வெப்பநிலை,நீளம், வேகம், ஒலி, இடம், நேரம், சேமிப்பகம்,என ஏராளமான அலகுகளை மாற்றிக்கொள்ள முடியும்.
தற்போதைய உங்கள் வலையமைப்பின் முகவரியை கண்டறிய.
Google தேடல் பக்கத்தில் My Ip என தட்டச்சு செய்க.
நேரத்தை அறிய
குறிப்பிட்ட ஓர் இடத்தின் நேரத்தை அறிய Time என தட்டச்சுசெய்து குறிப்பிட்ட இடத்தினை தட்டச்சு செய்க
உதாரணமாக : Time Tamil Nadu
நாணய மாற்று விகிதத்தை அறிய
குறிப்பட்ட அந்த நாட்டு நாணயத்தை அடையாளப் படுத்தப்படும் குறியீட்டுடன் பின்வரும் அமைப்பில் தட்டச்சு செய்க
உதாரணமாக : 10 US $ இணை இலங்கை ரூபாவுக்கு மாற்ற 10$=?lkr என தட்டச்சு செய்க
குறிப்பிட்ட ஒரு சொல்லின் பொருளை அறிய வேண்டுமெனின்
Define என தட்டச்சு செய்து பொருளறிய வேண்டய சொல்லை தட்டச்சு செய்க
உதாரணமாக : define leadership என தட்டச்சு செய்க.
ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் சனத்தொகைய அறிய
Population என தட்டச்சு செய்து சனத்தொகையை அறிய வேண்டிய நாட்டை அல்லது பிரதேசத்தை தட்டச்சு செய்க.
உதாரணமாக : Population india
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்.
குறிப்பிட்ட ஓரிடத்தின் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அறிய வேண்டுமெனின் பின்வருமாறு தட்டச்சு செய்க
சூரிய உதயத்தை அறிய : Sunrise குறிப்பிட்ட இடம்
சூரிய அஸ்தமனத்தை அறிய : Sunset குறிப்பிட்ட இடம்
உதாரணமாக : Sunrise colombo, Sunset kandy

thanks to http://www.tamilinfotech.com/2013/05/Google-Searching-Tips.html

CAPTCHA TEXT என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?


இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கப்சா ரெக்ஸ்ட் (CAPTCHA Text) ஒன்றை மேற்கொள்ளும்படிகேட்கும். இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் கப்சா ரெக்ஸ்ட் என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன?
இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய பதில் குறிப்பு. கப்சா ரெக்ஸ்ட் என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது.
ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப்பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கப்சா ரெக்ஸ்ட் சோதனை.
இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உங்களுக்குக் காட்டப்படும் கப்சா ரெக்ஸ்ட் சோதனைக்கான எழுத்துக்கள் அல்லது எண்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், அருகில் வட்டவடிவ அம்புக் குறியாகக் காட்டப்படும் ஐகானை அழுத்தவும். புதிய எழுத்துகள் அடங்கிய கப்சா ரெக்ஸ்ட் சோதனை தரப்படும்.

Thanks to Jahan Moulana

இணையத்தில் உங்கள் புகைப்படங்கள் எங்கெங்கு உள்ளது என அறிய ஆவலா?


இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal
photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது.
மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright andwatermark) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள். ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும்.
இதையெல்லாம் எப்படி கண்டறிவது? இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம்.
இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது. இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான்.
இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம். எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : Tineye.com

thanks to http://kananitips.blogspot.in