மொபைலில் இருக்கும் தகவல்களை அவ்வப்போது கணினிக்கு மாற்ற வேண்டியிருக்கும், ஒவ்வொரு முறையும் டேட்டா கேபிள்களை வைத்திருக்க முடியாது. இருந்தும் தகவல்களை மாற்ற ப்ளூடூத் வசதியை பயன்படுத்தலாம். ப்ளூடூத் மூலம் இரு கருவிகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்வது எளிமையாக முடிகிறது. ஆனால் ப்ளூடூத் கருவியை கணினியுடன் இணைப்பது கடினமாக உள்ளதா, அப்ப இதை படிங்க…
ஆன்முதலில் உங்க மொபைல் ப்ளூடூத்தை ஆன் செய்யுங்கள், பின் அந்த டிவைஸ் கண்டுபிடிக்கும்படி (டிஸ்கவரபிள் ஆப்ஷனில்) உள்ளதா என்று பாருங்கள்.
கணினிஇப்ப உங்க கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் மெனு சென்று கன்ட்ரோல் பேனலை க்ளிக் பன்னுங்க, அங்கு டிவைசஸ் மற்றும் ப்ரின்டர்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
ஆட் டிவைஸ்இப்போ ஆட் டிவைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இது ஹார்டுவேர் மற்றும் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும்.
தேடல்ஆட் டிவைஸ் பட்டனை க்ளிக் செய்தவுடன் தானாக ப்ளூடூத் டிவைஸை தேட ஆரம்பிக்கும்.
கணினிஇப்போ உங்க கணினியை மொபைல் கருவியுடன் இணைக்கலாம். உங்க ப்ளூடூத் பெயர் மெனுவில் தெரிந்ததும் Next என்ற பட்டனை அழுத்தவும். இது கணினியுடன் ப்ளூசூத் இணைவதை உறுதி படுத்தும்.
Thanks to : : http://www.anbuthil.com/2014/11/pc-to-mobile-bluetooth.html
இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal
photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது.
மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright andwatermark) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள். ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும்.
இதையெல்லாம் எப்படி கண்டறிவது? இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம்.
இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது. இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான்.
இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம். எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.
இணையதள முகவரி : Tineye.com
thanks to http://kananitips.blogspot.in
கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் Mouse ஆனது கணினியை பயன்படுத்துவதற்கு இன்றி அமையாத ஒரு சாதனமாகும். மடிக்கணினி பயன்படுத்துபவர்கள் கூட Touch Pad இற்கு பதிலாக பிரத்தியோக Mouse ஒன்றினை இணைத்து பயன்படுத்துவதும் உண்டு. (என்னை போன்று)
நாம் இதனை கணினிபயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தினாலும் இதில் இருக்கும் சில வசதிகளை நாம் சரியாக அறிந்ததில்லை. அவ்வாறான சில வசதிகளை கீழே பார்க்கலாம்.
*.உங்கள் கணனியில் உள்ள அல்லது இணையத்தில் இருக்கக்கூடிய எழுத்து வடிவில் அமைந்த ஆவணங்களில்/பதிவுகளில் உள்ள ஒரு சொல்லினை தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நாம் அவற்றினை Mouse மூலம் Click செய்து தெரிவு செய்வோம் அல்லவா?ஆனாலும் குறிப்பிட்ட சொல்லினை Double Click செய்வதன் மூலம் மிக இலகுவாக தெரிவு செய்து கொள்ள முடியும்.
*.அதே போல் எழுத்து வடிவில் அமைந்த ஒரு ஆவணத்தில்/பதிவில் உள்ள ஒரு வசனத்தினை அல்லது பந்தியினை தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் குறிப்பிட்ட வசனத்தின் அல்லது பந்தியின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை Mouse மூலம் Click செய்தவாறு தெரிவு செய்வோம் அல்லவா? ஆனாலும் இதனை பின்வரும் வழிமுறையிலும் மேற்கொள்ளலாம்.
அதாவது குறிப்பிட்ட வசனத்தின் அல்லது பந்தியின் ஆரம்ப இடத்தினை Mouse ஆள் Click செய்து விட்டு அதன் இறுதிப்பகுதியை Shift Key ஐ அழுத்தியவாறு Click செய்ய வேண்டும். இனி குறிப்பிட்ட வசனம் அல்லது குறிப்பிட்ட பந்தி தெரிவு செய்யப்படும்.
*.இணையத்தில் இருக்கும் ஒரு இணைப்பை புதியதொரு தாவலில் (Tab) திறக்க வேண்டும் எனின் நாம் பொதுவாக அந்த இணைப்பினை Right Click செய்து Open Link in New Tab என்பதனை சுட்டுவோம் அல்லவா?இருப்பினும் குறிப்பிட்ட இணைப்பினை Mouse இன் Scroll Wheel மூலம் சுட்டுவதன் மூலமாக அதனை புதியதொரு தாவலில் திறந்து கொள்ள முடியும்.
Tnq to : http://www.tamilinfotech.com
எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk-ன் உதவியில் Boot
ஆகி இயங்க ஆரம்பிக்கும். Boot என்பது கணினியை
ஆரம்பிக்கும் செயல். ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy, CD, DVD வாயிலாக Boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.
ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting CD /DVD யோ இல்லாமல் இருக்கும். இன்றைக்கு எல்லாரிடத்திலும் USB Drive கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப்படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம் (Operating System).
இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம். செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி Boot செய்து இயக்கி உங்களது பழைய Data-களை மீட்டெடுக்கலாம்.
கீழே உள்ள லிங்கை டவுன்லோட் செய்து வரும் பைலை Winrar உதவியுடன் திறந்து அதிலுள்ள Readme.TXT பைலை படித்து அதன்படி செயல்படுத்தவும்.
By:-
Jahan Moulana
http://fb.com/groups/JahanSoft94/
நீங்கள் பயன்படுத்துவது Windows 7 இயங்குதளம் நிறுவப்பட்ட கணினி எனின் Command Prompt இல் systeminfo | find /i “install date” என தட்டச்சு செய்து Enter அழுத்துக.
நீங்கள் பயன்படுத்துவது Windows 8/8.1 இயங்குதளம் நிறுவப்பட்ட கணினி எனின் Command Prompt இல் systeminfo | find /i “Original” என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி உங்கள் கணினியின் இயங்குதளம் நிறுவப்பட்ட நேரம் மற்றும் திகதியினை அறிந்து கொள்ளலாம்.
Thanks to
http://www.facebook.com/Tamilinfotech
This Is Usefull Site.Increase Your Knowledge in tamil