windows-டாஸ்க் மானேஜர்

விண்டோஸ் இயக்கத்தில் நமக்குப் பல இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுவது அதன் டாஸ்க் மானேஜர் பயன்பாடு. இதன் பலமுனைச் செயல்பாடுகளை இங்கு காணலாம்.
விண்டோஸ் இயக்கத்தில் டாஸ்க் மானேஜர் பெற, Ctrl+Alt+Delete கீகளை அழுத்தி, டாஸ்க் மானேஜர் விண்டோவினைப் பெறவும். டச் ஸ்கிரீன் விண்டோ கொண்ட டேப்ளட் பயன்படுத்தினால், சர்ச் கட்டத்தில், Task Manager என டைப் செய்து, அதில் Task Manager என்னும் ஐகான் மீது கிளிக் செய்திடவும்.
விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயக்கத்தில், டாஸ்க் மானேஜர் பாப் அப் ஆகும்.
இந்த விண்டோவில், Applications டேப்பில் கிளிக் செய்தால், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்கும் அனைத்து புரோகிராம்களும் காட்டப்படும். கம்ப்யூட்டர் வழக்கமான வேகத்தில் இயங்காமல், மெதுவாக இயங்கினால், இந்த டூலை நாம் பயன்படுத்த வேண்டும். சில வேளைகளில், ஒரே புரோகிராமினை அடுத்தடுத்து புதியதாக இயக்கி, ஓட விட்டிருப்போம். பல வேளைகளில் இது நடைபெறும். புரோகிராம் ஐகானில் கிளிக் செய்து, அந்த புரோகிராம் கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து பலமுறை அதே ஐகானில் கிளிக் செய்திருப்போம். இதனால், அது பலமுறை இயக்கப்படும். இதனை அப்ளிகேஷன்ஸ் டேப்பில் அறிந்து, தேவையற்றதனை நிறுத்தலாம். புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து End Task பட்டனை அழுத்த, அந்த புரோகிராம் நிறுத்தப்படும்.
ஏதேனும் ஒரு புரோகிராம், லாக் ஆகி, இயங்காமல் நின்று விட்ட நிலையில், மூடவும் முடியாத நிலை ஏற்படும். அப்போது அந்த புரோகிராமினை நிறுத்த இதுவே சரியான வழி.
இன்னும் பல பயன்களை டாஸ்க் மானேஜரில் பெறலாம். Processes என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இப்போது, பின்னணியில் நாம் அறியாமல் இயங்கும் புரோகிராம்களும் காட்டப்படும். அனைத்து புரோகிராம்களும் பயன்படுத்தும் சி.பி.யு.வின் திறன், மெமரி என்னவென்று இங்கு அறிந்து கொள்ளலாம். இதன் மூலம், கம்ப்யூட்டரில் நமக்குக் கொஞ்சம் கூடத் தேவையில்லாத புரோகிராம் ஏதேனும் ஓடிக் கொண்டிருந்தால் அறிந்து, அதனை நிறுத்தலாம். புரோகிராம் பெயரில் கிளிக் செய்து அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் End Process என்பதில் கிளிக் செய்தால், புரோகிராம் உடனே நிறுத்தப்படும்.
டாஸ்க் மானேஜரில், Services என்பதனைத் தேர்ந்தெடுத்தால், நம் கம்ப்யூட்டர் இயக்கும் சர்வீஸ் புரோகிராம்களைக் காணலாம். சர்வீசஸ் என்பதுவும் அப்ளிகேஷன் புரோகிராம்களே. இவை, கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். இவற்றை எளிதில் நம் கட்டுப் பாட்டில் கொண்டு வர முடியாது. எடுத்துக் காட்டாக, பிரவுசர் அப்டேட், ஆண்டி வைரஸ் அப்டேட் என்பன போன்ற வசதிகளைப் பெற, இவற்றின் அப்டேட் புரோகிராம்கள் இயங்கிக் கொண்டே இருக்கும். இதே போல் தான் ப்ளக் இன் மற்றும் தர்ட் பார்ட்டி பாதுகாப்பு புரோகிராம்களும்.
டாஸ்க் மானேஜரில், Performance என்னும் டேப்பினை கிளிக் செய்து கிடைக்கும் விண்டோ மூலம், நம் கம்ப்யூட்டரின் செயல் திறனைக் காணலாம். இந்த விண்டோவில், சி.பி.யு. பயன்பாடு, மெமரி மற்றும் இவற்றின் முந்தைய நிலைகளையும் அறியலாம். கீழாகக் கிடைக்கும் Resource Monitor என்பதில் கிளிக் செய்தால், மிக விரிவான தகவல்களைப் பெறலாம்.
Networking என்பதனைத் தேர்ந்தெடுத்து, நம் கம்ப்யூட்டர் வயர் மூலமாகவும், வயர் இல்லாமலும் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க் குறித்து அறிந்து கொள்ளலாம். Users டேப் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் பயனாளர்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். இங்கிருந்தே லாக் ஆப் செய்திடலாம்.
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்துபவராக இருந்தால், டாஸ்க் மானேஜர் சற்று வித்தியாசமாக இருக்கும்.
Startup என்ற டேப்பினைக் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் இயங்கும்போதே, சிஸ்டத்துடன் சேர்ந்து இயங்கும் புரோகிராம்களைக் காணலாம். அவை எப்படி நம் கம்ப்யூட்டரின் அனைத்து வகை திறனையும் பயன்படுத்துகின்றன என்று அறியலாம். நமக்குத் தேவை இல்லாதவற்றை, Disable என்பதைக் கிளிக் செய்து அமைப்பதன் மூலம், நிறுத்தலாம்.

try{
Umobi.AdView({
pub:”admin@spvvivek1998wordpress”,
format_type:Umobi.AdFormatType.BANNER
});
}catch(e){}



One thought on “windows-டாஸ்க் மானேஜர்”

பின்னூட்டமொன்றை இடுக