கூகுள் தேடுதலில் கால வரையறை


இன்று தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தைத்தான்.நம் தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது.
தேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் தேடுவோம். ஆனால், கூகுள் எப்போதோ, சில மாதங்களுக்கு, ஆண்டு களுக்கு முன்னர் வந்த தகவல்களையும் காட்டும்.
இவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட நாட்களுக்குள் இணையத்தில் பதித்த தகவல்களை மட்டும் காட்டுமாறு நாம் கூகுளுக்கு ஆணையிடலாம்.
1. முதலில் நாம் தேடும் தேடல் சொல் அல்லது சொற்களை கூகுள்சர்ச் பீல்டில் அல்லது டூல் பாரில் அமைக்க வேண்டும்.
2. முடிவுகளுக்கான பட்டியல் காட்டப்படும். இதில் இடது பக்கப் பிரிவில் உள்ள Show search tools என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கால வரையறைகளை அமைக்கும் வகையில் சில ஆப்ஷன்ஸ் விரிக்கபடும்.
3. இதில் “Any time” என்பது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழாக “Past hour,” “Past 24 hours,” “Past 2 days,” என தொடர்ந்து பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.
4. இதன் கீழாக Custom range என்பதில் கிளிக் செய்திடவும்.
5. உடனே காலண்டர் ஒன்று காட்டப்படும். இதில் எந்த நாளிலிருந்து பதிக்கப்பட்ட தகவல் வேண்டும் என்பதை “From” பீல்டில் அமைப்பதன் மூலம் வரையறை செய்திடலாம்.
6. நீங்கள் பீல்டை காலியாக விட்டு விட்டால், இன்று வரை பதிக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இல்லை எனில் இங்கும் நாள் ஒன்றைக் குறிப்பிடலாம்.
7. அடுத்து, Search என்பதில் கிளிக் செய்தால், நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதியப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
இது நமக்கு மிகவும் உதவும் ஒரு தேடல் வசதி. இதன் மூலம் நாம் விரும்பும் வகையில் முடிவுகளைப் பெறலாம்.

Advertisements

ஃபேஸ்புக்கைப் (FACEBOOK) பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்!


உலகின் மாபெரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியான இன்டர்நெட்டின் வரலாற்றில் ஃபேஸ்புக் துவங்கப்படும் வரை சமூக வலைத்தளம் என்ற ஒன்றை எவரும் அறிந்திருக்கவில்லை.
இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருப்பதுடன், சமூக வலைதளத்தின் அடித்தளம் அமைக்கப்படும் முன்பாக ஒரு மாபெரும் தோற்றம் மற்றும் மாற்றத்தை அடைந்துள்ளது. உலகெங்கிலும் பலகோடி ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களுக்கு நடுவில் ஒவ்வொரு வாடிக்கையாளரும்தனக்கே உரிய உலகத்தில் விவாதங்களை நடத்திக் கொண்டும் தங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் செய்யும் வேளையில், இந்த ஃபேஸ்புக்கைக் குறித்த, மனதை அதிர வைக்கும் உண்மைகளைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகிறது.
இப்போது சமூக வலைதளத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் ஃபேஸ்புக்கைப் பற்றிய, அருமையான, ஆர்வமூட்டக்கூடிய மற்றும்அசர வைக்கும் உண்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம்.ஒரு சாதாரண சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்டு இன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாறி உலகெங்கிலும் பரவியிருக்கும் இந்த நிறுவனத்தின் நினைத்துப் பார்க்க முடியாத சக்தியை குறித்து அறிந்து வைத்துக் கொள்வது பயனுள்ள ஒன்று.
இதில் சில உண்மைகள் ஃபேஸ்புக்கைப் பற்றிய ரகசியங்கள் என்றும் கூறலாம். சுவாரசியமான இந்த பத்து உண்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள.
துவக்கம்
ஃபேஸ்புக் துவங்கிய முதல் கோடை காலத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் குடும்பம் இந்த முயற்சியை காப்பாற்ற சுமார் 85,000 டாலர்களை செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு, இந்த புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்தை உயிர்ப்புடன் வைக்க உதவியாக இருந்தது. இன்று இந்த நிறுவனம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக அறியப்படுகிறது..
முதல் பங்கு விற்பனை
ஃபேஸ்புக் முதன்முதலில் தன் பங்குகளை நாஸ்டாக் பங்குச்சந்தையில் விற்கத்துவங்கியபோது, அதன் பங்குகளின் விலை 38 அமெரிக்க டாலர்கள் என்ற நல்ல விலையை பெற்றன. அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரபலமான நிறுவனங்களான யாஹூ, க்ரூபான், லிங்க்டின், நெட்ப்ளிக்ஸ் மற்றும் ஐ எ சி ஆகிய நிறுவனங்களில் ஒட்டுமொத்த மதிப்பையும் மிஞ்சி சுமார் 100 பில்லியன் டாலர்கள் என்ற அபரிமிதமான அசுர வளர்ச்சியை அடைந்தது.
ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் இணைய தளங்கள்
70 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைய தளங்கள் ஃபேஸ்புக்கை இணைத்துக் கொள்ளும் வசதியை கொண்டுள்ளன.
20 நிமிடங்களில் என்ன நடக்கிறது?
ஒவ்வொரு 20 நிமிடமும் நம்பமுடியாத சுமார் 20 லட்சம் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அல்லது நட்பழைப்புகள் விடப்படுகின்றன.சுமார் 30லட்சம் குறுஞ்செய்திகள்பரிமாற்றப்பட்டுசுமார் 10 லட்சம் தொடர்புகள் இணைக்கப்படுகின்றன.
ஒரு நாள் பயணம்
ஒரு நாளில் மட்டும், 35 கோடி படங்கள் பதிவேற்றம் (அப்லோட்) செய்யப்படுகின்றன. மேலும் சுமார் 450 பில்லியன் லைக்குகள் கொடுக்கப்படுகின்றன.
சீனா
சீனாவில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தாலும், சுமார் ஒன்பதரை கோடி பேர் அதைப் பயன்படுத்துகின்றனர். ஆச்சரியம்… அல்லவா?
500 டாலர் பரிசு!
ஃபேஸ்புக் நிறுவன விதிகளின் படி, உத்தரவாதமாக யாரேனும் அதன் மென்பொருள் விவரங்களில் குறைபாடுகளைக் கண்டறிந்தால் அவர்களுக்கு500 டாலர் சன்மானமாக வழங்கப்படும்.
எண்ணற்ற மொழிகள்
இந்த உண்மை நம்புவதற்கு சற்று கடினமானது தான். ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்களுக்கு சுமார் 70 மொழிகள் உள்ளன.
நன்றி,
ஸ்ரீபரன்.
Thanks to https://m.facebook.com/thagavalguru1

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி


உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள்.
கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.
முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள்.
தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும்.
இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது
friendslist என்று Type செய்து Enter செய்யவும்.
நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.
இது மாதிரி {“list””1000011345400-2″, “10000043254566-3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய
fecebook account number ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.
மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும்.
இப்பொழுது new tab-ல் http://www.facebook.co m/என்று type செய்து அதன் அருகில் fecebook account number ஐ copy செய்து
past செய்யவும். இப்பொழுது Enter கொடுக்கவும் உங்களின் profile ஐ நோட்டமிட்டவரின்profile ஓபன் ஆகும்..!

Thanks to https://m.facebook.com/groups/1466282100311196

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி


மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில்அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.

இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.
உங்கள் போனில் இருந்து பாட்டரி,சிம்கார்ட்,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளிபாகங்களை துடைக்கவும்.
உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleanerஇல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும்.

இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).
அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம்.

Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும்.

இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால்போன் ஓகே,பேட்டரி பிரச்சினை.

அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம்கொண்டு போய் கொடுக்கவும்.

Thanks to : http://computertricks4pc.blogspot.com

Facebook Groups App எனும் புதியதொரு மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது Facebook நிறுவனம்.


இந்த மென்பொருளானது உங்கள் உறவினர் நண்பர்களுடன் குழு அரட்டையில் ஈடுபடுவதனை மிகவும் இலகுபடுத்துகின்றது.

உங்கள் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், வகுப்பு மாணவர்கள், விடுதி நண்பர்கள் என உங்கள் நண்பர்களை தனித்தனி குழுக்களாக அமைத்துக் கொள்ளவும் அவர்கள் ஒவ்வொருவருடனும்ஒரே நேரத்தில் கருத்துக்களை பரிமாரிக் கொள்வதனையும் மிக இலகுபடுத்தித் தருகின்றது.

Android, iOS போன்ற Smart சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும’

Thanks To Tamilinfotech